Kaamadhenu Arts and Science College

Affiliated to Bharathiar University, Coimbatore

An ISO 9001:2008 Certified Institution

Sathyamangalam, Erode District – 638 503

HAPPY PONGAL ... 🙂

South Asia

Tamil

கல்லூரி தொடங்கிய நாளிலிருந்து தமிழ்த்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ்த் துறை சார்பாக, முதலில் சிறந்த ஒழுக்கம், படிக்கப்படிக்க பண்பு, போன்றவைகளும் நம் திருமுறைகள், நீதிநூல்கள் ஆகியன வாழ்க்கைக்கு எவ்வாறு உதவும்? அதனை நடைமுறையில் எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும்? என்பனவற்றை மாணவச் செல்வங்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்து அவர்களைச் சிறந்த மாணவர்களாக உருவாக்குகின்றோம்.

வழங்கப்படும் பாடக்கோப்பு
M.phil ., தமிழ் இலக்கியம்
Ph.D தமிழ் இலக்கியம்

தமிழ்த்துறை நிகழ்ச்சிகள்

செப்டம்பர் 11-ஆம் தேதி வருடந்தோறும் “பாரதி அஞ்சலி” விழா கல்லூரிக் கலையரங்கில் நடத்தப்பட்டு, இவ்விழாவின் சார்பாக மாணவச் செல்வங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

டிசம்பர் மாதம் வருடந்தோறும் கோவை கம்பன் கழகத்தார் மாணவச்செல்வங்களுக்கு “கம்பராமாயணம் காட்டும் வாழ்வியல் நெறிகள்” மூலம் பட்டிமன்றம் நடத்தி பரிசுகள் வழங்கி வருகின்றன. இதில், முதல் பரிசு பெறும் மாணவர் “கோவை கம்பன் கழக விழாவில்” பேச வாய்ப்பும், அதில் சிறப்பாகப் பேசினால், வேலூர் கம்பன் கழகத்தில் பேச வாய்ப்பும் அளிக்கப்படுகின்றது.

மாணவச் செல்வங்களின் மனம் செம்மைப்படும் வகையில் “மதுரை உலகத்திருக்குறள் பேரவை” நடத்தும் திருக்குறள் தேர்வு நடத்தப் பெற்றுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை கலாகேந்திரா நடத்தும் கவிதை, கட்டுரை, ஓவியம், கையெழுத்து, ரங்கோலி ஆகிய போட்டிகளில் மாணவச் செல்வங்களைப் பங்கேற்க வழிவகை செய்யப்படுகின்றன.

அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் மாணவச்செல்வங்கள் பங்கேற்கும் பொருட்டு, தமிழ்த்துறை சார்பாகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

பன்னாட்டுக் கருத்தரங்கம்.

1. பெரியபுராணம் உணர்த்தும் அன்புநெறி.

2. கண்ணதாசன் (சமயநெறி உணர்த்தும் விழுமியங்கள்)

3. திருமுறைகளில் கலைக்கூறுகள்.

4. அற்புதங்கள் நிகழ்த்திய அருள்ஞானசம்பந்தர்.

தேசியக் கருத்தரங்கம்.

1. இறையருள் பாடல்கள் துயர்தீர்க்கும் அருமருந் துகள்.

2. பெரியபுராணம் உணர்த்தும் விழுமியங்கள்.

3. பக்திநெறியில் பழமொழிப் புலப்பாடு.

4. தெய்வமொழி தமிழே.

5. பாரதியும் பக்திநெறியும்.

6. திருத்தொண்டர்புராணம் உணர்த்தும் திருத்தொண்டு நெறி.

7. ஆளுடைய பிள்ளையார் திருத்தொண்டத்தொகை.

8. திருமந்திரம் உணர்த்தும் அறம்.

9. குருவாய் வந்துதித்த குகனின் பெருங்கருணை.

10. வள்ளல் பெருந்தகையின் கொல்லாமையும் புலால் உண்ணாமையும். .

11. தோணி புரத்தோன்றல் ஒரு சமுதாயச்சிற்பி.

12. அபிராமி அந்தாதியின் அற்புதக்கூறுகள்.

Western Ghats