தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் இலக்கிய மன்றம் அறிமுகம்
“காலத்தால் அழியாத கற்பக விருட்சமே
எங்கள் தமிழே வாழிய! வாழியவே”
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் படைப்புகளின் பாமாலைகளை ஆண்டுதோறும் அணிவித்து மகிழ்ந்திட, கடந்த 2002 ஆம் ஆண்டில் திரு.மாணிக்கம் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் முதல்வர் அவர்களால் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக மாணவர்களின் கைவண்ண கோலங்கள், ஓவியம் வரைதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி பட்டிமன்றம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் தமிழின் பெருமையை போற்றும் வகையில் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் என பல கவிமாலைகளை தமிழ் அன்னைக்கு சூட்டுவதில் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் பெருமை கொள்கின்றது.
தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம்
நம் கல்லூரியில் தாய்மொழியின் பெருமையையும், தமிழின் பாரம்பரியத்தையும், தமிழரின் கலாச்சாரத்தையும், மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பதுதான் இந்த தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கமாகும்.
தமிழ் இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள்
- மாணவர்களின் தனித் திறனை வளர்த்தல்
- கல்வியின் உயரிய விழுமியங்களை அடைதல்
- நாட்டுப்பற்று மிகுந்த சிறந்த குடிமகனாக விளங்கிடவும், மாணவர்களின் நற்பண்புகள், அறிவியல் சிந்தனை, மனித நேயம் ஆகியவற்றை மேம்படுத்துதல்
- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி ,பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி,பட்டிமன்றம் போன்ற போட்டிகளுக்கு ஆயத்தம் செய்தல்
- பாடத்திட்டம் சார்ந்த பாட இணை செயல்பாடுகள்
- பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள்
உறுப்பினர்கள்
வ.எண் | பெயர் | பதவி | பொறுப்பு |
---|---|---|---|
1 | ம.ரேவதி | உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை | ஒருங்கிணைப்பாளர் |
2 | சே.ரம்யா | உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை | துணை ஒருங்கிணைப்பாளர் |
3 | வி.பிரகாஷ் | தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு | மன்றத் தலைவர் |
4 | பி.சரண்யா | தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு | மன்றத் துணைத் தலைவர் |
5 | பி.சோபனப்பிரியா | தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
6 | எஸ்.ஸ்ரீநிதி | தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
7 | எஸ்.ராஜேஸ்வரி | தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
8 | வி.திவ்யா | தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
9 | எஸ்.மயிலீஸ்வரன் | தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
10 | எஸ்.கற்பகவல்லி | தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
11 | என்.மேனகா | தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
12 | எஸ்.சந்தியா | தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
13 | வி.சண்முகப்பிரியா | தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு | மாணவ உறுப்பினர் |
நிகழ்ச்சிகள்
வ.எண் | தேதி | நிகழ்ச்சிகள் | பங்கேற்பாளர்கள் |
---|---|---|---|
1 | 21-02-2023 | “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” - சிறப்பு சொற்பொழிவு | 90 |
2 | 11-12-2022 | பாரதியார் பிறந்தநாள் விழா - கவிதை மற்றும் பேச்சு போட்டி | 51 |
3 | 12-09-2022 | பாரதியார் நினைவு தின விழா - கவிதைப் போட்டி | 90 |
4 | 06-09-2022 | ஆசிரியர் தின விழா - புத்தகம் வாசிப்போம் | 85 |
5 | 12-08-2022 | 75 ஆவது சுதந்திர தின விழா – கட்டுரைப் போட்டி | 30 |